Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுமியை லாட்ஜிக்கு அழைத்து சென்று.. போலீஸ் செய்யும் வேலையா இது?

Last Modified செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:17 IST)
சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த ஆயுதப்படை காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார்(44) சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். ஒரு புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அவருக்கு, அவரின் வீட்டின் அருகே வசிக்கும் சலவை தொழில் செய்யும் ஒரு விதவை பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, நேற்று முன்தினம் காரில் அந்த சிறுமியை வேலூருக்கு அழைத்து சென்றுள்ளார்.
 
வேலூர் சென்ற பின் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது மது அருந்திய அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு, செல்வகுமாருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து அவசர உதவி எண் 100க்கு அந்த சிறுமி தொடர்பு கொண்டு, தன்னை லாட்ஜில் அடைத்து வைத்து செல்வகுமார் பாலியல் பலாத்காரம் செய்ய முயல்வதை கூறி அழுதுள்ளார்.
 
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் கழிவறையில் உள்பக்கம் தாட்பாள்  போட்டு பத்திரமாக இருந்த அந்த சிறுமியை மீட்டனர். ஆனால், செல்வகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின், வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே நின்றிருந்த அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன் பின் அவர் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :