பீர் சேலஞ்ச்: டிவிட்டரை அதிரவிடும் பெண்கள்....
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், ஆண்களுக்கு நிகராக பெண்களும் பீர் குடுப்பது தற்போது எனக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது, பெண்கள் பீர் குடிப்பது கும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு எல்லை கடந்துள்ளது. பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் போதைப் பொருள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். எல்லா பெண்கள் பற்றியும் நான் இங்கு சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதானல், பெண்கள் பலர் தங்கலது பெற்றோருடன் பீர் குடிக்கும் பகைப்படம் மற்றும் வீடியோக்கைளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறது. இது தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி உள்ளது.
#GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டாக் பயன்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.