Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கரினாவுக்காக ரஷ்யாவில் புதிய ரயில் நிலையம்....

Last Updated: ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (14:24 IST)
14 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக வடமேற்கு ரஷ்யாவில் ஒரு புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரினா கோஸ்லோவா என்ற சிறுமி பள்ளிக்கு சென்றுவர இந்த முடிவை எடுத்துள்ளனர்.

சிறுமி கரினா கோஸ்லோவாவின் பாட்டி நடாலியா கோஸ்லோவா ஒரு முன்னாள் நர்சரி பள்ளி ஆசிரியை. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் - முர்மான்ஸ்க் ரயில் பாதை, தொலைதூர போயாகோண்டா கிராமத்திற்கு சேவையை தொடங்கவுள்ளது.


ரயில்வே ஊழியர்களை ஏற்றிக்கொள்ளவும், அவர்களை இறங்கிட மட்டுமே முன்பு இங்கு ரயில்கள் நின்றன. இதற்காக நிற்கும் ரயில்களை விட்டால், இவர்களுக்கு வேறு ரயில் இல்லை.

இதனால் போயாகோண்டா கிராமத்தில் புதிய ரயில் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. போயாகோண்டா கிராமத்தில், 50-க்கும் குறைவான குடும்பத்தினரே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லும் ஒரே மாணவி கரினா மட்டுமே.


இதில் மேலும் படிக்கவும் :