தங்கல் பட பாணியில் இளைஞரை புரட்டி எடுத்த சிறுமி; வைரலாகும் வீடியோ

fight
Last Modified வியாழன், 8 பிப்ரவரி 2018 (15:38 IST)
தங்கல் பட பாணியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுமி மல்யுத்தப்போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இளைஞரை அடித்து துவசம்சம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு, மல்யுத்த போட்டியை மையமாக வைத்து வெளிவந்த படம் தங்கல், இப்படம் வெளியாகி பல வசூல் சாதனைகளை படைத்தது. 
 
இந்நிலையில், தங்கல் பட பாணியில் மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமிக்கும் இளைஞருக்கும் மல்யுத்த போட்டி நடைபெற்றது.
அந்த போட்டியில் சிறுமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட இளைஞரை புரட்டி எடுக்கிறார். அந்த இளைஞரோ, சிறுமியை தடுக்க முடியாமல் திணறுகிறார். இறுதியில் சிறுமி அவரை தூக்கி கீழே போட்டு வெற்றி வாகை சூடினார். 13 வயது சிறுமியின் திறமையை அனைவரும் பாராட்டினர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :