வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (08:15 IST)

4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் மொத்தம் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தபோதிலும் தேர்தல் ஆணையம் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தலை அறிவித்தது. நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்த நிலையில் இந்த நிலைப்பாட்டிற்கு நீதிமன்றமே சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது. மேலும் திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டு கொண்டது
 
இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று சென்னை வந்தார். சென்னையில் 2 நாட்கள் தங்கி இருக்கும் அவர், மக்களவை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளார். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். ;
 
இந்த நிலையில் இந்த ஆலோசனையின்போது தேர்தல் அறிவிக்கப்படாத 4 தொகுதி இடைத்தேர்தல் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து அரசியல் கட்சிகளுடன் சுனில் அரோரா ஆலோசனை செய்து விரைவில் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.