வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (09:12 IST)

இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பில் ஜெயலலிதாவின் கைரேகை சந்தேகத்திற்கு இடமாக இருப்பதால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 
இந்தந் இலையில் இந்த தீர்ப்பை சுட்டிக் காட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல என்பது உறுதியாகியிருப்பதாகவும், இதனால் இடைத்தேர்தலின்போது அவர் உயிருடன் இருந்தாரா? என்ற கேள்வி தற்போது எழுந்திருப்பதாகவும் கூறினார். மேலும் பதவியில் இருந்த ஒரு முதலமைச்சரின் மரணத்தில் மர்மம் இருப்பதால், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்தின் விசாரணை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது