வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (13:32 IST)

ஏப்ரல் 18 பொது விடுமுறை – வெளியானது அரசாணை !

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை என அறிவித்து அரசாணை வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் 39 தொகுதிகளாக மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேக் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ‘மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தியும், மக்கள் பணி சுமையின்றியும், இடையூறு இன்றியும் வாக்களிக்கும் வகையிலும் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்குப்பதிவு அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம்’ எனத் தெரிவித்துள்ளது.