புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (09:11 IST)

54 வயது ஆசிரியரை திருமணம் செய்த 19 வயது பெண்: கடைசியில் நடந்த விபரீதம்

54 வயது ஆசிரியரை திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் வாழப்பாடியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன். இவரது மகள் காயத்ரி (வயது 19). 
 
இந்த நிலையில், காயத்ரியை நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும், வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் காலனியை சேர்ந்த 54 வயதான துரைசாமி என்பவர் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். 
 
நேற்று முன்தினம் காலை பழனியாபுரத்தில் உள்ள துரைசாமி வீட்டில்  காயத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் வசந்தி (37) வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். 
 
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
54 வயது ஆசிரியரை திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.