1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 30 ஜனவரி 2019 (16:12 IST)

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவார்கள்: தம்பித்துரை நம்பிக்கை

தேர்வு மற்றும் தேர்தல் நெருங்கி வருவதால் ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை முழுமையாக கைவிட்டு பணிக்கு திரும்புவார்கள் – கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


கரூர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தை சுற்றி தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனம் சார்பில் 25 லட்சம் ருபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. அதற்கான பூமி பூஜை இன்று அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையி்ல்  மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மக்களவை துணை சபாநாயகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்  போது தற்போது அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சுற்றி புதிய சாலை அமகை்கப்படவுள்ளது. மேலும் கரூர் நகர் பகுதியில் சாலை அமைப்பதற்காக 14 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வகையில் பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. தற்போது தமிழகத்தில் 95 சதவிகிதம் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு் விட்டு பள்ளிக்கு திருப்பியுள்ளனர். இந்த ஆர்பாட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தலையிட்டு. கோரிக்கைகளை பேச்சு வார்த்தை மூலம் தான் தீர்வு காணவேண்டு வேலை நிறுத்தம் செய்வது சரியானது அல்ல.

மேலும் அரசின் நிதி நிலையில் தலையிடாது என்று தெளிவாக கூறியுள்ளது. தேர்வு மற்றும் தேர்தல் வரவுள்ளது இந்த பணிகளை செய்யப்போவது ஆசிரியர்கள்தான், மாணவர்கள் மற்றும் மக்கள் நலன்கருதி போராட்டத்தில் கைவிட்டு தங்களுடைய பணிக்கு திருப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது., அரசு பணியாளர்களிடம் பெறப்பப்பட்ட பென்ஷன் தொகை எந்த துறைக்கு செலுத்த வேண்டுமோ அந்த துறைக்கு செலுத்தியுள்ளது என்றார்.

சி.ஆனந்தகுமார்