Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 6,15,24

Last Modified வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:48 IST)

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரங்கள் சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அழகு, இளமைக் கூடும். நல்ல நிறுவனத்தில் உத்யோகம் கிடைக்கும். விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பணவரவுக்கு குறைவிருக்காது என்றாலும் பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும். அரசு காரியங்கள் உடனே முடியும். உற்சாகமடைவீர்கள். திடீர் திருப்பங்கள் உண்டாகும். சிலர் புது வீடு மாறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்துச் சேரும். சகோதரிக்கு திருமணம் முடியும். வசதி, வாய்ப்புகளும் பெருகும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரம் செழிக்கும். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்-. வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்று முடிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி கிடைக்கும். உயரதிகாரிகளே வியக்கும்படி சில முக்கிய காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்கள் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அனுபவ அறிவை பயன்படுத்தி முன்னேறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்:4,5,6,13,14
அதிஷ்ட எண்கள்:2,6
அதிஷ்ட நிறங்கள்:சில்வர்கிரே,ரோஸ்
அதிஷ்ட கிழமைகள்:புதன்,வெள்ளி


இதில் மேலும் படிக்கவும் :