Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2,11,20,29

Last Modified வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:33 IST)

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகளால் உற்சாகமடைவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதுசு வாங்குவீர்கள். என்றாலும் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீடு பராமரிப்புச் செலவுகள் இருக்கும். வாகனம் பழுதாகும். தலை வலி, சைனஸ் தொந்தரவுகள் வரக்கூடும். மாத மையப்பகுதியிலிருந்து பிரச்னைகள், சிக்கல்கள், உடல் நலக் குறைவுகள் என்று வந்தாலும் எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். இடம், வீடு வாங்குவீர்கள். அவ்வப்போது கோபப்படுவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்ததன்மையையே பின்பற்றுவது நல்லது. அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பெரியளவில் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்:2,6,15,16,25
அதிஷ்ட எண்கள்:1,8
அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,மஞ்சள்
அதிஷ்ட கிழமைகள்:வியாழன்,சனி


இதில் மேலும் படிக்கவும் :