Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிசம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3,12,21,30

Last Modified வெள்ளி, 1 டிசம்பர் 2017 (19:36 IST)

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதம் எதிர்ப்புகள் அடங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நெடுநாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். சகோதரங்கள் ஆதரிப்பார்கள் என்றாலும் சில நேரங்களில் போட்டி, பொறாமைகள் வரக்கூடும். எங்குச் சென்றாலும் வெற்றி கிடைக்கும். எதிலும் மகிழ்ச்சி உண்டு. திடீர் பணவரவு உண்டு. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். அம்மாவழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாட்களாக வீடு மாற நினைத்தவர்களுக்கு வீடு கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகும். குழந்தை பாக்யம் கிட்டும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். ஆன்மிகப் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள் இருக்கும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! பள்ளி, கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். புது முதலீடு செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை பிறக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்:3,9,10,21,27
அதிஷ்ட எண்கள்:4,5
அதிஷ்ட நிறங்கள்:மெரூண்,ஆலிவ்பச்சை
அதிஷ்ட கிழமைகள்:புதன்,சனி


இதில் மேலும் படிக்கவும் :