Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

Numerology
Last Updated: வெள்ளி, 2 மார்ச் 2018 (19:53 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத் திறன் கூடும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பணவரவு உண்டு. 

 
வீடு கட்ட பூமி பூஜைப் போடுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். புது வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். நட்பு வகையில் நல்ல செய்தி கேட்பீர்கள். 
 
மனைவிவழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய சொந்த-பந்தங்களை சந்திப்பீர்கள். என்றாலும் அடுக்கடுக்காக செலவுகள், ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு வேலைச்சுமை, சில நேரங்களில் தூக்கமின்மை வந்துச் செல்லும். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். 
 
அரசியல்வாதிகளே! புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 
 
கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகள் வெளிப்படும். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 18, 30
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்


இதில் மேலும் படிக்கவும் :