14 வயது அண்ணனால் குழந்தை பெற்றெடுத்த 11 வயது தங்கை: அதிர்ச்சி சம்பவம்!
ஸ்பெயின் நாட்டில் 14 வயது அண்ணனால் 11 வயதான தங்கை குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வயிற்று வலியால் துடித்த சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை பெற்றோர்கள் ஸ்பெயினின் முர்சியா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சேர்த்த பின்னர் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதுவரை சிறுமி கர்ப்பமாக இருப்பது சிறுமிக்கோ, அவரது பெற்றோருக்கோ தெரியாது.
இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமியின் 14 வயது அண்ணனே அந்த குழந்தைக்கு தந்தை என்பது தெரியவந்தது. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் வழக்கு பதிவு செய்யவில்லை.
டிஎன்ஏ பரிசோதனை செய்ததில்தான் அந்த குழந்தைக்கு தந்தை 14 வயது சகோதரன் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த சிறுவன் தனது சகோதரியுடன் உறவு கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. முழுமையான விசாரணை முடிந்த பின்னரே முழு தகவலும் தெரிய வரும் என கூறப்படுகிறது.