கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த சிறுமி!
14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வருடமாக கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மறைத்து பள்ளிக்கு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமிக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அவர் தனது கணவர் கட்டிய தாலியை கடந்த ஒரு வருடமாக மறைத்து அணிந்த நிலையிலேயே பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் கழுத்தில் தாலி இருப்பதை யாரோ ஒருவர் பார்த்து மகளிர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்த விசாராணையில் இறங்கியுள்ளனர்.