Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிறுமியை சமையலறையில் கட்டி வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்!

Last Modified சனி, 3 பிப்ரவரி 2018 (13:23 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் வீட்டில் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை சமையலறையில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
 
விபத்து ஒன்றில் தனது பெற்றோரை இழந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது பாட்டி வளர்த்து வந்தார். ஆனால் அவர் அந்த சிறுமியை 4000 ரூபாய்க்கு சுரேந்தர் என்பவருக்கு விற்றுள்ளார்.
 
இந்த சுரேந்தர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதியினரிடம் வீட்டுவேலை செய்வதற்காக அனுப்பி வைத்தார். அங்கு இரண்டு வருடங்கள் எந்த துன்புறுத்தலும் இல்லாமல் இருந்த சிறுமியை உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனது நண்பர் மிஷ்ராவின் வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி வைத்துள்ளார்.
 
மிஷ்ரா அந்த சிறுமி டெல்லியில் வீட்டு வேலை செய்து சம்பாதித்த 30 ஆயிரம் ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துள்ளார். மேலும் வீட்டில் தனது மனைவி, குழந்தைகள் இருக்கும்போதே சமையலறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
சிறுமி தடுத்தாலோ, சத்தம்போட்டாலோ கத்தியை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் சிறுமியை கட்டிப்போட்டும் பலாத்காரம் செய்த மிஷ்ரா சிகரெட்டினால் சிறுமிக்கு சூட வைத்த மிருகத்தனத்தையும் அரங்கேற்றியுள்ளார்.
 
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் மிஷ்ராவின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி இரண்டு இளைஞர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. தற்போது சிறுமி ஃபரிதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :