வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2023 (17:18 IST)

AI மற்றும் டீப் ஃபேக் வீடியோ தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி கவலை

PM Modi sad
ஏஐ தொழில் நுட்பம் வளர்ச்சி என்பது மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது. பளுவை குறைக்கிறது. பல புதிய விஸ்யங்களுக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்த ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரின் குரலில் பேசுவது. பாடுவது, டீப் பேக் வீடியோ, மார்பிங் புகைப்படம் என்று பல விஷங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.

சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ராஷ்மிகா, அமிதாப், உள்ளிட்ட சினிமாத்துறையினர் கண்டனம் தெரிவித்தனர்.

இன்று கஜோல், கரீனா கபூரில் டீப் பேக் வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கும் சினிமா துறையினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏஐ, டீப்பேக் தொழில்  நுட்பங்களின் அபாயம் கவலையளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கர்பா  நடனம் ஆடுவது போன்ற  போலி  வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதற்கு பிரதமர் மோடி, ஏஐ,. டீப் பேக் தொழில் நுட்பங்களால்  உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களின்  உண்மைத்தன்மையை ஆராயாமல் மக்கள் நம்பிவிடுகின்றனர். இந்தப் போக்கு சமூகத்தில் பெரிய சவாலை உண்டாக்கும். இதுபற்றி மக்களுக்கு புரிதல் ஏற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.