புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (08:44 IST)

படிப்பறிவற்ற அரசியல் தலைவர்கள்… சர்ச்சையில் சிக்கிய கஜோல் அளித்த விளக்கம்!

பிரபல பாலிவுட் நடிகையான கஜோல் இந்தி சினிமாவின் ஸ்டார் நடிகையாக பல ஆண்டுகளாக ஜொலித்துகொண்டிருக்கிறார். இவர் தமிழிலும் மின்சாரக் கனவு படத்திலும் நடித்துள்ளார். 48 வயதாகும் இவர் இந்தி , தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியானது.

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பின. அதில் “இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாற்றம் என்பது மிகவும் மெதுவாகதான் நடக்கும். ஏனென்றால் நாம் நம் பாரம்பர்யத்தில் மூழ்கியுள்ளோம். படிப்பறிவில்லாத அரசியல் தலைவர்கள் நம்மை ஆண்டு வருகிறார்கள். அவர்களில் பலருக்கும் ஒரு தொலைநோக்குப் பார்வை மற்றும் கண்ணோட்டம் இல்லை. கண்ணோட்டத்துக்கான வாய்ப்பைக் கல்விதான் கொடுக்கும்” எனக் கூறியிருந்தார்.

கஜோலின் இந்த பேச்சு சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே கூறினேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல, நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்.” என கூறியுள்ளார்.