வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (21:49 IST)

புஷ்பா படத்தின் காட்சிகள் வேதனையளிக்கிறது- ஆந்திர மாநில ஐஜி காந்தராஜ்

புஷ்பா -1 திரைப்படத்தில் போலீஸ் குறித்து காட்டிள்ள காட்சிகள் வேதனையளிப்பதாக ஆந்திர மாநில செம்மர கடத்தல் ஐஜி காந்தராஜ் கூறியுள்ளார்.

அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் போலீஸ் அதிகாரியாக  நடித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் சுனில் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், இப்படம் குறித்து ஆந்திர மாநில செம்மர கடத்தல் ஐஜி. காந்தாராஜ் கூறியுள்ளதாவது:

செம்மரக் கடத்தலை தடுக்கவே ஆந்திரா, கர் நாடகா, தமிழ் நாடு,  ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போலீஸார், மற்றும் அதிகாரிகள் எடுத்த முயற்சிகள் பற்றி   இப்படத்தில் தவறாகச் சித்தரிக்க வேண்டாம். கடத்தல் காரனை ஹீரோவாகக் காட்டிவிட்டு, போலீஸை லஞ்சம் வாங்கும்  குண்டர்களாக காட்டியது வேதனை அளிப்பதாகவுள்ளது. 2 வது பாகத்தில், போலீஸாரின் தியாகத்தைப் பற்றி காண்பிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.