Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டெல்லியில் ஓபிஎஸ், எடப்பாடி : இரு அணிகளும் இணைவு?

Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (12:19 IST)

Widgets Magazine

அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக துணைப்பொதுச்செயலாளரக தினகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் எனவும், தினகரனின் அறிவிப்புகள் எதுவும் செல்லாது எனவும், அதிமுகவிற்கு ஜெயலலிதாதான் நிரந்த பொதுச்செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியும் வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த தீர்மானம் தினகரன் தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  
 
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கினால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை முதல்வர் எடப்பாடி அணி ஏறக்குறைய நிறைவேற்றியுள்ளது.
 
எனவே இரு அணிகளும் மீண்டும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. ஓ.பி.எஸ்-ற்கு அவர் விரும்பும் ஒரு துறையும், அதேபோல், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை விஜயபாஸ்கரிடமிருந்து பறித்து, ஓ.பி.எஸ் ஆதரவு செம்மலைக்கு அளிக்கப்படலாம் எனவும், தொழில்துறை அமைச்சர் பதவி எம்.சி.சம்பத்திடம் இருந்து பறிக்கப்பட்டு, ஓ.பி.எஸ் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜனுக்கு அளிக்க எடப்பாடி அணி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


 

 
இந்நிலையில்தான், துணை ஜனாதிபதியாக வெங்கயநாயுடு பதவியேற்கும் விழாவிற்கு வருமாறு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோருக்கு டெல்லியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நேற்று டெல்லி சென்றுள்ளனர். எனவே, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடும் எனத் தெரிகிறது.
 
எனவே, இரு அணிகளும் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்: பள்ளி மீது பொதுமக்கள் கல்வீச்சு!

ஈரோட்டில் பள்ளி மாணவி ஒருவருக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ...

news

பிஞ்சு குழந்தையை அனாதை இல்லத்திற்கு கொரியர் அனுப்பிய தாய்....

தனக்கு பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி பார்சல் செய்து அனாதை இல்லத்திற்கு ஒரு ...

news

திமுகவில் சேர வேண்டும் என நினைத்திருந்தால்... : கமல்ஹாசன் ஓபன் டாக்

பலவருடங்களுக்கு முன்பே தன்னை திமுகவில் சேரும்படி திமுக தலைவர் கருணாநிதி அழைத்தார் என ...

news

தினகரன் நீக்கம் ; கருத்து கூறிய ஹெச்.ராஜா : கட்டம் கட்டிய நெட்டிசன்கள்

அதிமுக துணைப்பொதுச்செயலாளரக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என முதல்வர் எடப்பாடி ...

Widgets Magazine Widgets Magazine