Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தினகரன் மீதான தீர்மானம் கபோதிகளின் அறிவிப்பு - நாஞ்சில் சம்பத் காட்டம்

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (14:19 IST)

Widgets Magazine

தமிழக முதல்வர் எடப்பாடி அணி சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எந்த வகையிலும் தினகரனை கட்டுப்படுத்தாது என தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


 

 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடிய கூட்டத்தில், துணை பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தது சட்டவிரோதம் எனவும், அவர் புதிதாக நியமித்த நியமனங்கள் எதுவும் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நாஞ்சில் சம்பத் “இது காற்றோடு கத்திச்சண்டை போடும் கபோதிகளின் அறிவிப்பு. எந்த வகையிலும் இது தினகரனை கட்டுப்படுத்தாது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர்கள் செய்து முடித்துள்ளார்கள். முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்கள். 
 
பதவி ஆசை எடப்பாடி பழனிச்சாமியின் கண்ணை மறைக்கிறது. தினகரனை மையப்படுத்தியே அரசியலுக்கு வந்த அவர் தற்போது அவரை ஒதுக்க நினைக்கிறார். இவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடையாது. வருகிற 14ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் இதற்கான பதில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.  


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்த இயக்குனர் - போலீசாரிடம் புகார்

தன்னை ஒரு சினிமா இயக்குனர் படுக்கைக்கு அழைத்ததாக, ஒரு இளம்பெண் போலீசாரிடம் புகார் ...

news

சிறுவர்களின் காமத்தை தூண்டி உடலுறவு கொண்ட திருமணமான பெண்!

அமெரிக்காவில் ப்ரூக் லஜினெஸ் என்ற 38 வயதான இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ...

news

தினகரன் நியமனம் சட்ட விரோதம் - சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி அணி தீர்மானம்

அதிமுக துணைப் பொதுச்செயலாளரக தினகரனை நியமித்தது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ...

news

தம்பிதுரையின் பேச்சை மேசையை தட்டி வரவேற்ற சோனியா காந்தி!

வெளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு நிகழ்வின் நிறைவையொட்டி பாராளுமன்றத்தில் நேற்று ...

Widgets Magazine Widgets Magazine