Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கூவத்தூரை விட பலமடங்கு: எம்.எல்.ஏக்களுக்கு அடித்தது யோகம்?


sivalingam| Last Modified வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (05:04 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதுகூட எம்.எல்.ஏக்கள் இந்த அளவுக்கு சம்பாதித்து இருந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு இன்றைய சூழ்நிலையால் பண்மழையில் நனைவதாக கூறப்படுகிறது.


 
 
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு கொடுக்க எம்.எல்.ஏக்களுக்கு கோடி கோடியாய் கொட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அணி மாற அதைவிட பலமடங்கு பணம் கைமாறுவதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
 
எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு ரூ.25 கோடியும், ஓபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கு ரூ.5 கோடியும் நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான் அதிர்ச்சி அடைந்த முதல்வர் நேற்று தினகரனை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் தினகரன் விரைவில் தனது ஆதரவாளர்களுடன் கவர்னரை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரண்டு நாட்களில் 24 மணி நேரமும் முக்கிய செய்திகள் வெளிவர வாய்ப்பு உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :