மோடியின் ஆட்சி 110 ஆண்டுகள் நீடிக்க வேண்டுமாம்!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 13 செப்டம்பர் 2017 (21:48 IST)
மோடியின் ஆட்சி 110 ஆண்டுகள் நீடிக்க வேண்டி அவருக்கு 110 அடி உயரத்தில் கட் அவுட் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 
 
வரும் 17 ஆம் தேதி, மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓவியர் ஹுசைன் துபாயில் இருந்து வந்துள்ளார்.
 
லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைப்பதற்காக, மோடியின் கட் அவுட் ஒன்றை உருவாக்கி வருகிறார். மோடியின் ஆட்சி 110 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று, 110 அடியில் கட் அவுட்டை வடிவமைத்து வருகிறார். 
 
அதுமட்டுமல்லாமல் 1500 கிலோ லட்டு, 105 கிலோ எடையிலான பெல் ஒன்றையும் மோடிக்கு பரிசு அளிக்க திட்டமிட்டுள்ளாராம்.
 
மேலும் முதலமைச்சர் ஆதித்யநாத்திற்கும் மோடியின் பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை பரிசளிக்க உள்ளாராம்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :