ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2019 (13:25 IST)

முன்னாள் முதல்வரின் வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்.. நாயுடு நிலை என்ன??

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியிலுள்ள கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள பங்களாவில் 4 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இந்த பங்களா கிருஷ்ணா நதியோரத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தற்போதைய ஜெகன் மோகன் அரசு, சந்திரபாபு நாயுடுவை அந்த வீட்டிலிருந்து காலி செய்ய வேண்டும் என கூறி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அந்த பங்களாவை சந்திரபாபு நாயுடு காலி செய்யவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் பெய்த கனமழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சந்திரபாபு நாயுடு பங்களாவிற்குள் நீர் புகுந்தது. தரை தளத்தில் இருந்த அனைத்து பொருட்களையும் முதல் மாடிக்கு கொண்டு சென்றுள்ளனர். வெள்ள நீர் அதிகளவு புகுந்ததால், சந்திரபாபு நாயுடு வீட்டை விட்டு வெளியேறி ஐதராபாத்திற்கு சென்றுவிட்டார்.

மேலும் பங்களாவிற்குள் நீர் புகாமல் இருக்க, ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர்.