அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில்; அடிக்கல் நாட்டிய ஜப்பான் பிரதமர்


Abimukatheesh| Last Updated: வியாழன், 14 செப்டம்பர் 2017 (13:51 IST)
அகமதாபாத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் ஜப்பான் பிரதமர் மற்றும் மோடி ஆகியோர் புல்லட் ரயில் பணிக்கான அடிக்கல்லை நாட்டினர்.

 

 
அகமதாபாத் - மும்பை இடையே அதிவேக புல்லட ரயில் இயக்கப்பட உள்ளது. 508 கி.மீ தூரம் பயணம் செய்ய உள்ள இந்த புல்லட் ரயில் மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும். இரு நகரங்களுக்கு இடையே 12 ரயில்வே நிலையங்களில் நின்று செல்லும். இந்த புல்லட் ரயில் தொடர்பான பணிகள் தொடங்க இன்று அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. 
 
இந்த விழாவில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே மற்றும் மோடி கலந்துக்கொண்டு புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினர். இந்த புல்லட் ரயில் திட்டம் ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :