வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (23:42 IST)

இதுதான் தூய்மை இந்தியாவின் லட்சணமா? நெட்டிசன்கள் கிண்டல்

பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் கொண்டு வந்த ஆக்கபூர்வமான திட்டங்களில் ஒன்று தூய்மை இந்தியா. இதற்கு அவர் கமல்ஹாசனை தூதராகவும் நியமித்திருந்தார். 



 
 
இந்த நிலையில் 'தூய்மை இந்தியா' குறித்து பாஜகவே தூய்மையாக நடந்து கொள்வதில்லை. என்றும் வேண்டுமென்றே ஒருசில குப்பைகளை கொட்டி அதை சுத்தப்படுத்துவது போல் தலைவர்கள் போஸ் கொடுப்பதாகவும் சமிபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த நிலையில் இன்று பாஜகவின் இளைஞரணி கூட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்டம் முடிந்தவுடன் மைதானத்தை பார்த்தால் ஒரே குப்பையாக இருந்தது
 
தூய்மை இந்தியா குறித்து வாய்கிழிய பேசும் பாஜக கூட்டத்திலேயே குப்பை டன் கணக்கில் கொட்டி கிடப்பதை நெட்டிசன்கள் போட்டோ எடுத்து அதை சமூக இணையதளங்களில் பதிவு செய்துள்ளனர். தூய்மை இந்தியாவை முதலில் பாஜக தனது தொண்டர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் விருப்பமாக உள்ளது