Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாராயணசாமியை மோடியிடம் போட்டுக்கொடுத்த கிரண் பேடி


Abimukatheesh| Last Updated: திங்கள், 12 ஜூன் 2017 (18:25 IST)
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய புதுவை ஆளுநர் கிரண் பேடி புதுவை முதல்வர் நாராயணசாமி மீது புகார் தெரிவித்துள்ளார்.

 


 
புதுவையில் முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்ற பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. 
 
புதுச்சேரியின் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் கிரண் பேடி தேவையற்ற முறைகளில் தலையிடுவதாக நாராயணசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து டெல்லி சென்ற கிரண் பேடி பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.
 
முதல்வர் நாராயணசாமி குறித்தும், புதுவையில் நடக்கும் பிரச்சனை குறித்தும் கிரண் பேடி மோடியிடம் விரிவாக தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :