திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (22:17 IST)

ரோட் ரோலரில் ஊர்வலமாக வந்த திருமண மாப்பிள்ளை

தமிழகம் உள்பட இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் மாப்பிள்ளையை ஊர்வலமாக அலங்காரம் செய்யப்பட காரில் அல்லது குதிரை வண்டியில் அழைத்து வருவது வழக்கம். ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமகனை ரோட் ரோலரில் அழைத்து வந்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள நடியா என்ற மாவட்டத்தில் கிருஷ்ணாநகர் என்ற பகுதியை சேர்ந்த அர்காபட்ரா என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமண நாளன்று மணமகனின் உறவினர்கள் மணமகனை திருமண மண்டபத்திற்கு ரோட் ரோலரில் வந்துள்ளனர்.

பாரம்பரிய உடை அணித்து மேளதாளங்களுடன் மணமகன் கார் அல்லது குதிரையில் வராமல் அலங்கரிக்கப்பட்ட ரோட் ரோலரில் வந்தது திருமணத்திற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓட்டுநர் இருக்கையில் மணமகனின் நண்பரும் அவர் அருகில் மணமகனும் அமர்ந்து வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது