செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (12:26 IST)

கோடநாடு வீடியோ விவகாரம்: மேத்யூ மீதான விசாரணைக்கு தடை; நீதிமன்றம் அதிரடி

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக மேத்யூ மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்று கூறி மேத்யூ மீது வழக்கு தொடரப்பட்டது. தன் மீது வழக்கு தொடரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேத்யூ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேத்யூ சார்பில் வீடியோ வெளியீட்டில் எந்த சதியும் இல்லை எனவும் எந்த உள்நோக்கத்திலும் இந்த வீடியோவை வெளியிடவில்லை என கூறப்பட்டது.
 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேத்யூ மீதான வழக்கை விசாரிக்க 4 வாரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டது.