Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோடைகாலத்தில் அசைவம் சாப்பிடுவது நல்லதல்ல என கூறக்காரணம் என்ன?

கோடைகாலத்தில்அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், கெட்டக் கொழுப்பின் அளவும் அதிகரித்து இதயநோய் வருவதற்கான சூழலை ஏற்படுத்தும். மேலும் குடல் இயக்கத்தை மந்தப்படுத்தும் வாய்ப்பும் உண்டு. 
அசைவம் பிரியர்கள் பெரும்பாலும் பிராய்லர் கோழிகளைத்தான். ஹார்மோன் ஊசி மற்றும் தீவனங்களைப்போட்டு குறுகியகாலத்தில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை கோடைகாலத்தில் மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் சாப்பிடக் கூடாது. நாட்டுக்கோழி சாப்பிடலாம். ஆனால், அதையும் கோடையில் தவிர்ப்பதே  சிறந்தது.
 
கோடை காலத்தில் வெப்பத்தில் நம் உடல் தகித்துக்கொண்டிருக்க, அந்த நேரத்தில் சூடு நிறைந்த கோழிக்கறியைச் சாப்பிட்டால் செரிமானமாவதில் சிக்கல்  ஏற்படும். வயிற்றுவலி, கழிச்சல், மூலம், வேறு சில வயிற்று உபாதைகளும் ஏற்படும்.
 
கோடை காலத்தில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். ஆகவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதுடன் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் மசாலா உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிகப் புரதம், கொழுப்புச் சத்து நிறைந்த மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, சிக்கன் போன்றவற்றைத் தவிர்க்க  வேண்டும்.
பல்வேறு பருவ காலங்களின் தன்மையை சரியாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான உணவு மற்றும் வாழ்வியல் முறைகளை கடைபிடிக்கும் போது அக்காலமானது சுகமான அனுபவங்களை தருவதாக அமையும்.


இதில் மேலும் படிக்கவும் :