Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா!

b
Last Modified திங்கள், 16 ஏப்ரல் 2018 (18:28 IST)
பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால், இதில் மாங்கனீசு, கால்சியம், செலினியம், சோடியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.
 
1.)பீட்ருட்டை கீரைகள் போல சமைத்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும். 
 
2.)பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
 
3.)பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
 
4.)பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.
 
5.)பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
 
6.)பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
 
7.) பீட்ரூட்டை தொடர்ந்து ஆண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் சந்தித்து வரும் பாலியல் பிரச்சனைகள் குணமடையும்.


இதில் மேலும் படிக்கவும் :