1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (12:29 IST)

குண்டான மனிதர்களே சந்தோஷமாக வாழ்கின்றனர்; ஆய்வில் தகவல்

குண்டாக இருப்பவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் மக்கள் பலரும் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். ஆனால் அவர்களை குதூகலப்படுத்தும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் அதிக உடல் எடையுடைய குண்டு மனிதர்களின் வாழ்க்கை நிலை குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 35 வயதிலிருந்து 75 வயதுக்குட்பட்ட, 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தினர். அவர்களது உயரம், உடல் எடை குறித்த பி.எம்.ஐ(BMI - Body Mass Index) தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
 
ஆய்வின் முடிவில் குண்டாக இருப்பவர்கள் பலர் இளம் வயதிலேயே  நீரிழிவு நோயால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது. இருந்தபோதிலும் அவர்கள் மனதில் மிகவும் பொறுமைசாளிகள் என்பதால் அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.