வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 23 டிசம்பர் 2017 (10:55 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு : மக்கள் செய்தி மையத்தின் கருத்துக் கணிப்பும் இதுதான்..

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என மக்கள் செய்தி மையம் கருத்து கணிப்பு நடத்தி செய்தி வெளியிட்டுள்ளது.  

 
ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவுகிறது. 
 
அந்நிலையில், தேர்தலுக்கு முன்பு அந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என சில கருத்து கணிப்புகள் எடுக்கப்பட்டது. அதில், குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரனே வெற்றி பெறுவார் என செய்திகள் வெளியானது. அதேபோல், தேர்தலுக்கு பிந்தைய சில தேர்தல் கணிப்பிலும் அவரே வெற்றி பெறுவார் என தகவல்கள் வெளியாகின.
 
இந்நிலையில், மக்கள் செய்தி மையத்தின் இளைஞர்கள் குழு கடந்த 21ம் தேதி ஆர்.கே.நகரில் நடைபெற்ற வாக்கு பதிவின் போதும், வாக்குப்பதிவு முடிந்து 12 மணி நேரம் கழித்து 22ம் தேதி காலை 6 மணியிலிருந்து மாலை வரை சுமார் 1872 வாக்களர்களை சந்தித்து கருத்துக்கணிப்பு நடத்தியது.  அதன் முடிவுகளின் படி,
 
டிடிவி தினகரன் - 674 வாக்குகள், அதாவது 36 சதவீதம்
 
மருது கணேஷ் (திமுக) - 635 வாக்குகள், அதாவது 33.29 சதவீதம்
 
மதுசூதனன் (அதிமுக) - 543 வாக்குகள், அதாவது 29.01 சதவீதம்
 
மற்றவர்கள் - 20 வாக்குகள் அதாவது 1.06 சதவீதம்
 
என செய்தி வெளியிட்டுள்ளது.
 
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துகணிப்புகளில் தினகரனே வெற்றி பெறுவார் என செய்தி உலா வருவது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.