திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2017 (23:50 IST)

கிறிஸ்துமஸ், பொங்கல் இரண்டையும் கலக்க முடிவு செய்த த்ரிஷா

வரும் கிறிஸ்துமஸ் தினத்திலும், பொங்கல் தினத்திலும் முன்னணி நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ள நிலையில் த்ரிஷாவும் தன் பங்குக்கு தனது ரசிகர்களுக்கு இந்த இரு தினங்களிலும் இன்ப அதிர்ச்சி ஒன்றை அறிவித்துள்ளார்

விஜய் நடித்த 'மதுர' பட இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள 'மோகினி' திரைப்படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே போல் இந்த படத்தின் பாடல்கள் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை த்ரிஷா தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

இரண்டு வித்தியாசமான வேடங்களில் த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் ஜாக்கி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டன் உள்பட வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஏப்ரலில் தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.