Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ. _ _, 999? சியோமியின் அதிரடி விலை குறைப்பு: விவரங்கள் உள்ளே....

Last Updated: வியாழன், 7 டிசம்பர் 2017 (14:31 IST)
சியோமி Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.37,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இதன் விலையில் அதிரடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு விற்பனையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5000 சலுகையில், புதிய Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனினை ரூ.32,999 விலையில் வாங்கலாம்.
பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது, ரூ.18,000 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் கூடுதலாக ரூ.99 செலுத்தி பைபேக் சலுகையையும் பெறலாம். EMI வசதியும் வழங்கப்படுகிறது.


குறிப்பிட்ட வங்கி கார்ட்டுகளுக்கு 5 முதல் 10 சதவிகிதம் வரை தள்ளுபடி பெற முடியும். பிளிப்கார்ட் தலம் மட்டுமின்றி சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் இந்த சலுகையை பெறலாம்.

Mi மிக்ஸ் 2 சிறப்பம்சங்கள்:

# 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 10nm ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
# 6 ஜிபி ராம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 12 எம்பி சோனி IMX386 பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா
# கைரேகை ஸ்கேனர், 3400 எம்ஏஎச் பேட்டரி


இதில் மேலும் படிக்கவும் :