Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ப்ளாக் ஃப்ரைடே பற்றி தெரியுமா??

Last Updated: சனி, 25 நவம்பர் 2017 (21:00 IST)
மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத கடைசி வெள்ளி கிழமை ப்ளாக் ஃப்ரைடே என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.


ப்ளாக் ஃப்ரைடே அன்று அனைத்து பெரிய நிறுவனங்களின் பொருட்களும் அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வரும். இதன் ஒரு பகுதியாக ஆன்லைன் விற்பனை நிலையமான அமேசான் பல அதிரடி சலுகைகளை வழங்கும்.


ப்ளாக் ஃப்ரைடே விற்பனையில் 70 சதவீத தள்ளுபடியுடன் 300-க்கும் மேற்பட்ட பொருட்கள் சலுகை விலையில் விற்பனைக்கு வரும். அதோடு இவற்றில் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்ற சலுகையும் உண்டு.


இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக இந்த ப்ளாக் ஃப்ரைடே ஷாப்பிங் திருவிழா துவங்கப்பட்டது. இதற்கு பெரும் அளவில் வரவேற்பு இருந்ததாக கூறப்படுகிறது.

பல பெரிய நிறுவனங்களின் பொருட்கள் இத்தனை சலுகைகளுடன் இந்தியாவில் விற்பனையாவது இதுவே முதன்முறையாகும். அறிமுக விற்பனையே வெற்றி கிடைத்துள்ளதால், இனி வரும் காலங்களிலும் இந்த சலுகை விற்பனை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :