Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏர்டெல் அன்லிமிடெட் பிளான்: ஜியோவை மிஞ்சும் சலுகை!!

Last Updated: சனி, 25 நவம்பர் 2017 (19:21 IST)
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணியில் இருந்த ஏர்டெல், ஜியோவின் வரவிற்கு பிறகு ஆட்டம் கண்டது. ஜியோவுக்கு போட்டியாக பல் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல்.


இந்நிலையில் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், ரூ.198-ல் அன்லிமிடெட் பிளான் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டதில் 4ஜி / 3ஜி / 2ஜி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் உள்ளூர், எஸ்டிடி அழைப்புகள் வழங்கப்படும். நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி 28 நாட்களுக்கு கொடுக்கப்படும்.

இதர்கு முன்னர், ரூ.199 அன்லிமிடெட் பிளான் மை ஏர்டெல் ஆப்பில் வழங்கபப்ட்டது. தற்போது சிறப்பு சேவைகள் பட்டியலில் ரூ.198 பிளான் இடம் பெற்றுள்ளது.

இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டதிற்கு அங்கு வரும் ஆதர்வை பொருந்து அடுத்தடுத்த இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :