வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 நவம்பர் 2017 (13:59 IST)

விலை குறைந்த சியோமி சாதனங்கள்: ஜிஎஸ்டி தாக்கம்....

இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீன நிறுவனமான சியோமி தனது சாதனங்கள் மீதான விலையை குறைத்துள்ளதாக தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது. 
 
ஜிஎஸ்டி வரிமுரையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதை அடுத்து தனது சாதனங்கள் மீது இந்த விலைக் குறைப்பை வழங்குவதாக சியோமி தெரிவித்துள்ளது. 
 
அந்த வலையில், அதிகபடியான விலைக் குறைப்பு இல்லாவிட்டாலும், Mi பவர் பேங்க், Mi பிஸ்னஸ் பேக்பேக், Mi சார்ஜர், யுஎஸ்பி ஃபேன் மற்றும் ஸ்மார்ட்போன் கேஸ் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 
 
விலை குறைக்கப்பட்ட சியோமி சாதனங்கள்:
 
# 10,000 எம்ஏஎச் Mi பவர் பேங்க் 2 ரூ.1,199-ல் இருந்து ரூ.1,099-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# 10,000 எம்ஏஎச் Mi பவர் பேங்க் ப்ரோ ரூ.1,599-ல் இருந்து ரூ.1,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# 20,000 எம்ஏஎச் Mi பவர் பேங்க் 2 ரூ.2,199-ல் இருந்து ரூ.1,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# Mi பிஸ்னஸ் பேக்பேக் விலை ரூ.1,499-ல் இருந்து ரூ.1,299-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# Mi சார்ஜர் 5V/2S அவுட்புட் ரூ.399-ல் இருந்து ரூ.349-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# Mi கார் சார்ஜர் ரூ.799-ல் இருந்து ரூ.699-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# யுஎஸ்பி கேபிள் ரூ.199-ல் இருந்து ரூ.179-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# 2 - இன் - 1 யுஎஸ்பி கேபிள் ரூ.299-ல் இருந்து ரூ.249-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
# ரெட்மி 4 ஹார்டு கேஸ் விலை ரூ.449-ல் இருந்து ரூ.349-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
# ரெட்மி வை1 பிரீ ஃபோரேடெட் கேஸ் ரூ.399-ல் இருந்து ரூ.349-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
# ரெட்மி நோட் 4 மற்றும் Mi மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்மார்ட் வியூ ஃபிளிப் கேஸ் மற்றும் சாஃப்ட்வேர் கேஸ் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.