வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 மே 2018 (11:38 IST)

வருமான வரி தாக்கலில் புதிய படிவம்: என்ன செய்வது?

ஆண்டு தோறும் வருமான வரி தாக்கல் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. தற்போது இந்த வருமான வரி தாக்குதலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆம், வருமான வரித்துறை 2017 - 2018 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கலில் புதிய படிவத்தினை அறிமுகம் செய்துள்ளது. 
 
வருமான வரி தாக்கல் செய்யக் கூடிய படிவமாக ஐடிஆர் 1 சஹாஜ் படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய படிவத்தில் தனிநபரின் வருமான விவரங்கள் மற்றும் சொத்துக்களில் இருந்து வரும் வருவாய் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. 
 
இந்த படிவத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்கள் வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்த படிவத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள்...
 
# இந்த படிவத்தில், சம்பள விவரங்கள், வீட்டு வாடகை அல்லது சொத்துக்கள் மூலமாகப் பெறப்படும் வருவாய் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். 
# ஐடிஆர் படிவம் 2-ன் கீழ் தனி நபர்கள் அல்லது இந்து கூட்டு குடும்பத்தினர் வருமானம் வேலை அல்லது வணிகம் இல்லாமல் பிற வழிகளில் வரும் பொது வருவாய் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். 
 
# வெளிநாட்டு இந்தியர்கள் என்றால் வெளிநாட்டு வங்கி கணக்கினை அளித்து வருமான வரி செலுத்துதல் அல்லது கூடுதலாக செலுத்தப்பட்ட வரியினைத் திரும்பப் பெற முடியும். 
 
#மேலும், ஜிஎஸ்டி வணிகம் அல்லது பிற தொழில் மூலம் வரும் வருவாய்க்கு ஜிஎஸ்டி எண் குறிப்பிட வேண்டும். அதற்கான வழிமுறைகளும் இந்த படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.