செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (10:49 IST)

1.4 ஜிபி டேட்டா: அசத்தும் ஏர்டெல் ஆஃபர்!

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி அதிகரித்துள்ளது. ஜியோவின் வரவால் வாடிக்கையாளர்கள் பயன் அடைந்தாலும், மற்ற நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன. 
 
ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ.199 சலுகையை போன்றே புதிய சலுகையும் அமைந்துள்ளது. 
 
ரூ.219 புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
ஆனால், இந்த புதிய சலுகையில் அன்லிமிடெட் ஹெல்லோ டியூன்கள் வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ.219 சலுகையை வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் செயலி அல்லது ஏர்டெல் வலைத்தளத்தில் பெறலாம். 
 
ஏர்டெல் ரூ.219 சலுகையை போன்று ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.149 மற்றும் ரூ.198 விலையில் இரண்டு சலுகைகளை வழங்குகிறது.