வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு...


Sugapriya Prakash| Last Modified திங்கள், 31 ஜூலை 2017 (12:32 IST)
2016 - 2017 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள், மேலும் காலம் நீட்டிக்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
நேற்று விடுமுறை நாள் என்ற போதிலும், வருமான வரித்துறை அலுவலகங்களில் கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
 
வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்ய முறையே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
 
இந்நிலையில் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :