செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (21:05 IST)

கோடிக்கணக்கில் மோசடி: பிளிப்கார்ட் நிறுவனர்கள் மீது வழக்கு!!

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் பெங்களூர் சேர்ந்த நவீன்குமாருக்கு சொந்தமான சி ஸ்டோர் நிறுவனம் ஓர் ஆண்டுக்கு லேப்டாப், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்திருந்தது. 
 
இதன் படி அந்நிறுவனம் கிட்டத்தட்ட 12,500 லேப்டாப்க்களை பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விநியோகம் செய்துள்ளது. ஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் 1482 யூனிட்டுகளை மட்டும் சி ஸ்டோர் நிறுவனத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது. 
 
மேலும், லேப்டாப் புக் செய்ததற்கான கட்டணம், வரி மூலம் கழிக்கப்பட்ட வரி போன்றவற்றையும் பிளிப்கார்ட் நிறுவனம் கொடுக்கவில்லையாம்.
 
ஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் நிறுவனம் 3,901 யூனிட்டுகளை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறியுள்ளது. இதனால், ரூ.9.96 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அந்த சி ஸ்டோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதனால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.