ரூ.14,000 வரை தள்ளுபடி: Mi மேக்ஸ் 2 விற்பனையில்....


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (18:52 IST)
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், பல ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

 
 
தற்போது, பிளிப்கார்ட் தளத்தில் சியோமி ஸ்மார்ட்போனிற்கு ரூ.2000 விலை குறைப்பு மற்றும் எக்சேஞ்ச் முறையில் ரூ.14,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
இதேபோல் அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.12,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. 
 
அமேசானில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு 60 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. 
 
அதோடு பிளிப்கார்ட்டில் குறிப்பிட்ட வங்கி கார்ட்டுகளுக்கு கேஷ்பேக் வசதிகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :