அமித்ஷா மகன் கேட்ட ரூ.100 கோடி: பிரபல பத்திரிகை அதிர்ச்சி


sivalingam| Last Modified திங்கள், 9 அக்டோபர் 2017 (04:41 IST)
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் என்பவர் நடத்தி வரும் நிறுவனம் டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டை விட, 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாக ’தி வொயர்’(The Wire) என்ற செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.


 
 
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்த ஜெய், அந்த பத்திரிகை மீது ரூ.100 கோடி கேட்டு நஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது வியாபார நடவடிக்கைகள் அனைத்தும், நேர்மையாகவும், முறையாகவும் உள்ளது மட்டுமின்றி சரியாக வரிசெலுத்தியும் நடைபெற்வதாக குறிப்பிட்டுள்ள ஜெய், இதற்காக வங்கியில் பெறப்பட்ட கடன் தொகை அனைத்தும், வட்டியுடன் முறையாக செலுத்தி வரப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்
 
இதேபோல் இந்த செய்தி நிறுவனத்தின் தவறான செய்தியை யாராவது மறுபதிப்பு செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :