Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோப்பை யாருக்கு?- இந்திய- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

india
cauveri manickam| Last Modified வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:50 IST)
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான கடைசி டி20  ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் 5 ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்தன. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 20 ஓவர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்ற நிலையில் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பது உண்மை.

 


இதில் மேலும் படிக்கவும் :