Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேகப்பந்து வீச்சாளர்!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 12 அக்டோபர் 2017 (15:20 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 

 
 
நெஹரா 1999 ஆம் ஆண்டு முகமது அசாருதீனின் தலைமையில் அறிமுகம் ஆனார். இதுவரை 17 டெஸ்டில் விளையாடி 44 விக்கெட்டுகளும், 120 ஒரு நாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளும், 26 இருபது ஓவர் போட்டிகளில் 34 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
 
இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்த முடிவை அணி நிர்வாகத்துக்கும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலிக்கும் அறிவித்துவிட்டார். 
 
மேலும், ஐபிஎல் போட்டியிலும் விளையாட போவதில்லை என்று முடிவு செய்துள்ளாராம். 


இதில் மேலும் படிக்கவும் :