Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரிக்கெட் பார்க்க வந்தவரின் உதட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா!

கிரிக்கெட் பார்க்க வந்தவரின் உதட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா!


Caston| Last Modified சனி, 30 செப்டம்பர் 2017 (16:53 IST)
இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டராக கலக்கி வரும் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸர் ஒன்று பார்வையாளரில் ஒருவரின் உதட்டில் பட்டு அவரது உதடு கிழிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 
 
தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணி இளம் வீரர்கள் பட்டாளத்தோடு புது ரத்தம் பாய்ச்சியது போன்று வீரம் நிறைந்ததாக காணப்படுகிறது. அதில் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
 
இவரை போன்ற ஒரு ஆல்ரவுண்டரை தான் இந்தியா இத்தனை காலம் தேடிக்கொண்டிருந்தது. எதிர்கால இந்தியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் மழை பொழிவதிலும், பெரிய ஷாட்களை அடிப்பதிலும் வெறியாக உள்ளார்.
 
இவர் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியின் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஜம்பா பந்தில் சிஸ்சர் விளாசினார். அந்த பந்து நேராக மைதானத்தில் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த, டோசிட் அகர்வால் என்ற ரசிகரின் உதட்டைப் பதம் பார்த்தது.
 
இதனையடுத்து அவருக்கு ரத்தம் கொட்டியதால் மைதானத்தின் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில தையல்கள் போடப்பட்டது. பாண்டியா அடித்த பந்து, தன்னை நோக்கி வந்தது, அது முகத்தில் பட்டுவிடாமல் இருக்க சற்று ஒதுங்கினேன் ஆனால் பந்து வேகமாக வந்து உதட்டில் பட்டு கிழித்துவிட்டது என அந்த நபர் கூறியுள்ளார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 3 சிக்ஸர்கள் விளாசினார்.


இதில் மேலும் படிக்கவும் :