Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கேப்டன் பதவியிலிருந்து விலகிய 360 டிகிரி பேட்ஸ்மேன்


Abimukatheesh| Last Updated: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (14:14 IST)
ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிவில்லியர்ஸ் விலகுவதாக தென் ஆப்பரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 
தென் ஆப்பரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக தென் ஆப்பாரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
 
டிவில்லியர்ஸ் சர்வதேச டாப் பேட்ஸ்மேன் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளவர். இவரது அதிரடி ஆட்டத்துக்கு உலக முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்தியாவிலும் இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக ஓய்வில் இருந்த வந்த டிவில்லியர்ஸ் விரைவில் போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தென் ஆப்பரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :