தோனி கட்டாயம் அணிக்கு வெளியே உட்கார வேண்டும்; கவுதம் காம்பீர்


Abimukatheesh| Last Updated: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (11:33 IST)
தோனி நன்றாக விளையாடாத பட்சத்தில் அவரும் அணிக்கு வெளியேதான் உட்கார வேண்டும் என்று கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

 

 
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணிக்கு உலக கோப்பை வாங்கி கொடுத்தார் என்ற பெருமையை விட சிறந்த வீரர் என்பது முக்கியமானது. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
 
தோனிக்கு தற்போது நெருக்கடி அதிகமாகியுள்ளது. கடந்த சில போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை என்று கூறி வருகின்றனர். அண்மையில் தேர்வு குழு தலைவர் பிரசாத், தோனி திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் இடம் என்று தெரிவித்தார்.
 
இதற்கு தோனியின் ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தற்போது கவுதம் காம்பீர் தோனி குறித்து கூறியதாவது:-
 
2019ஆம் ஆண்டு உலக கோப்பை அணியில் ஆட வேண்டும் என்றால் அவர் கண்டிப்பாக நன்றாக விளையாட வேண்டும். யாராக இருந்தாலும் சரி அது தோனியாக இருக்கட்டும் மனீஷ் பாண்டேவாக இருக்கட்டும். தோனி இந்திய அணிக்காக நிறைய சாதனைகள் புரிந்தவர்.
 
ஆனால் அது பழைய கதை, நாம் நிகழ்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நன்றாக விளையாடாத பட்சத்தில் அவரும் அணிக்கு வெளியேதான் உட்கார வேண்டும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :