ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:44 IST)

தொடர்ந்து விளையாடுவாரா?... ஹர்திக் பாண்ட்யாவின் காயம் பற்றி பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா

பங்களாதேஷுக்கு எதிரான நேற்றைய போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா காலில் காயம் ஏற்பட்டு உடனடியாக மைதானத்தை விட்டு வெளியெறினார். அவருக்கு பதிலாக விராட் கோலி பந்துவீசினார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் ஹர்திக் பாண்ட்யாவின் காயம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். அதில் “ பவுலிங்கில் சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனாலும் அதன் பின்னர் எங்கள் பவுலர்கள் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எங்களுடைய பீல்டிங் நான்கு ஓவர்களிலும் சிறப்பாக அமைந்தது.

ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை பெரிதாக கவலைப்பட தேவையில்லை.  நாளை (இன்று) காலை அவரின் மருத்துவ நிலையை அறிந்து அதற்கேற்ப திட்டமிடுவோம்.  ரசிகர்கள் இதுவரை எந்த மைதானத்தில் விளையாடினாலும் முழு ஆதரவை தருகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.